search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட்"

    ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாதுகாப்பான (defensive batting) ஆட்டத்தை வெளிப்படுத்தியதை நான் பார்த்ததில்லை என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 88 ஓவரில் 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி, அஸ்வின் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

    பெரும்பாலும் பாதுகாப்பு ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் 2-வது நாளில் 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இஷாந்த் சர்மா 15 ஓவவர்கள் வீசி 6 மெய்டனுடன் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு 2.07 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    பும்ரா 20 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு 1.70 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    அஸ்வின் 33 ஓவர்கள் வீசி 50 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு 1.52 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஷமி 16 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவருக்கு 3.19 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இதுபோன்று பாதுகாப்பான ஆட்டத்தை விளையாடியது கிடையாது என்று சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தனது ட்வீட்டில் ‘‘இந்தியா இந்த சூழ்நிலையை அதிக அளவில் உருவாக்க வேண்டும். தங்களது பலத்தை விட்டுவிடக் கூடாது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சொந்த மண்ணில் பாதுகாப்பு ஆட்டம் மனநிலையுடன் விளையாடினார்கள். இதற்கு முன் எனது அனுபவத்தில் அப்படி பார்த்தது கிடையாது. அஸ்வின் அபாரமாக பந்து வீசினார். தற்போது வரை அணி நல்ல நிலைமையில் இருக்க அவர்தான் காரணம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    எதிரணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு டெய்ல் எண்டர்ஸ் தலைவலி கொடுத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. #AUSvIND
    இந்திய டெஸ்ட் அணி கடந்த சில வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சொந்த மண்ணில் ஜாம்பவனாக விளங்கிய இந்திய அணி தற்போது வெளிநாடுகளில் விளையாடி வருகிறது. பந்து வீச்சில் அசுர பலத்துடன் விளங்குகிறது. ஆனால் பேட்டிங்கில் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை 1-2 என இந்தியா இழந்தது. அதன்பின் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் 1-4 என தோல்வியடைந்தது.

    இந்த தொடரில் இந்தியா சார்பில் விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். கடைசி டெஸ்டில் மட்டும் லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் சதம் அடித்தனர்.

    இங்கிலாந்து தொடரில் இந்திய பந்து வீச்சாளர்களான ரிஷப் பந்த், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று விளையாட விடவில்லை. அதேசமயம் டெய்ல் எண்டர்ஸ் என அழைக்கப்படும் கடைநிலை வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களை இந்திய பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் குறைந்த ரன்களில் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

    தற்போது ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. இதிலும் டெய்ல் எண்டர்ஸ் என்ற சோதனை தொடர்ந்த வண்ணமே உள்ளன.

    அடிலெய்டு பிட்ச் ரன் குவிப்பிற்கு சாதகமான வகையில் இல்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 127 ரன்னிற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.



    7-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். அப்போது டிராவிஸ் ஹெட் 21 ரன்னுடன் களத்தில் இருந்தார். பேட் கம்மின்ஸை துணைக்கு வைத்துக் கொண்டு டிராவிஸ் 17.3 ஓவர்கள் கடத்தி விட்டார். இந்த நேரத்தில் டிராவிஸ் ஹெட் - கம்மின்ஸ் ஜோடி 50 ரன்கள் எடுத்துவிட்டது. கம்மின்ஸ் 47 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து ஸ்டார்க் களம் இறங்கினார். ஸ்டார்க்கை வைத்துக்கொண்டு அரைசதம் அடித்ததோடு 2-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் உள்ளனர்.

    முன்னணி பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு, டெய்ல் எண்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் தலைவலி கொடுத்து வருகிறது இன்னும் நீண்டு கொண்டே வருகிறது.
    ஸ்மித், வார்னர் இல்லாவிடிலும், பந்து வீச்சில் அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக ரகானே தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளைமறுநாள் (6-ந்தேதி) அடிலெய்டில் தொடங்குகிறது. சிறந்த பேட்ஸ்மேன்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா பலவீனமாக காணப்படுகிறது. இந்த முறை இந்தியா தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலியாவை பலவீனமடைந்த அணி என்று கூறிவிட முடியாது என்று இந்திய அணியின் துணைக்கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘எந்த அணியும் அதன் சொந்த மண்ணில் விளையாடும்போது, அவர்கள் சிறந்த அணியாகத்தான் திகழ்வார்கள் என்று உணர்கிறேன். ஆஸ்திரேலியா இன்னும் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்.

    நாங்கள் எப்போதுமே எதிரணியை எளிதாக எடுத்துக் கொண்டு விளையாடுவதில்லை. அவர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோரை இழந்திருக்கிறார்கள். என்றாலும், ஆஸ்திரேலியா அணி பலவீனமானது என்று நான் கருதவில்லை.



    அவர்களுடைய பந்து வீச்சு யூனிட்டை பார்த்தீர்கள் என்றால், மிகவும் அசுர பலம் கொண்டது. இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும் என்றால், பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே, ஆஸ்திரேலியா இன்னும் தொடரை கைப்பற்றுவதற்கு வாய்ப்புள்ள அணியாகவே கருதுகிறேன்.

    ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டால், சிறந்ததாக உணர்வீர்கள். இது அணிகளாக ஒன்று சேர்ந்து விளையாடும் போட்டி. ஒவ்வொருவரும் அணிக்காக பேட்டிங்கில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். முக்கியமான விஷயம், நீண்ட பார்ட்னர்ஷிப். இது ஆஸ்திரேலியா மண்ணில் மிகப்பெரிய உதவியாக இருக்கும்’’ என்றார்.
    இந்திய அணி அடிலெய்டில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாட மறுத்ததால் டிக்கெட் விற்பனை பாதித்துள்ளதாக தெற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. #AUSvIND
    டி20 கிரிக்கெட் அறிமுகமான பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ரசிகர்கள் ஆதரவு பெரிய அளவில் குறைந்தது. ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்பதால் டெஸ்ட் போட்டியை மைதானத்திற்கு வந்து பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் பெரிய அளவில் குறைந்ததால், ஆட்டத்தை நான்கு நாட்களாக குறைக்கலாமா? என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இதற்கிடையில் பகல்-இரவு டெஸ்டாக மாற்றினால் வேலை முடிந்து ரசிகர்கள் மைதானத்திற்கு பெரிய அளவில் திரண்டு வரலாம் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எண்ணியது. இதனால் ‘டே-நைட்’ டெஸ்ட் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியது. இந்த டெஸ்டை அடிலெய்டில் நடத்தியது. இதற்கு மைதானம் அமைந்துள்ள மாநிலத்தில் உள்ள ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.



    இதனால் ஆஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டு அணிகளிடம் அடிலெய்டில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாட கோரிக்கை வைத்தது. நியூசிலாந்து போன்ற அணிகள் ஆஸ்திரேலியாவில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாடியது. தற்போது இந்தியா ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    ஆனால், இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் அடிலெய்டில் முதல் டெஸ்ட் நாளைமறுநாள் ‘டே’ போட்டியாக நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ‘டே-நைட்’ போட்டிக்கு கிடைத்த வரவேற்பு போன்றது இல்லை. உள்மாநிலத்தில் டிக்கெட் விற்பனை பாதித்துள்ளது என்று தெற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அசோசியேசன் கவலை தெரிவித்துள்ளது.
    உள்ளூர் கிரிக்கெட்டில் முச்சதம் (345) விளாசிய ரென்ஷா, இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியா அணியில் இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். #AUSvIND
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க பேட்ஸ்மேன் ரென் ஷா. 22 வயதாகும் இவர் இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் பார்ம் இல்லாமல் தவித்ததால் தொடர்ச்சியாக அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.

    சமீபத்தில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது அணியில் இடம்பிடித்திருந்தார். பயிற்சி ஆட்டத்தின்போது பீல்டிங் செய்தபோது, ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. இதனால் தொடரில் இருந்து விலகினார்.



    ஆஸ்திரேலியாவில் கிரேடு அளவிலான தொடரில் விளையாடினார். டூம்புல் அணிக்காக விளையாடிய ரென்ஷா வின்னும்/மேன்லி அணிக்கெதிராக 273 பந்தில் 345 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா தேசிய அணியில் இடம்கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறார்.

    ஆனால் முதல் தர கிரிக்கெட் தொடரான ஷெப்பீல்டு ஷீல்டு தொடரில் 8 இன்னிங்சில் 158 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்திருந்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிராக 21, 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அணியில் கிடைக்குமா? என்பது சந்தேகமே...
    ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகிய மும்மூர்த்திகளால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம் என்று ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது தொடரை 0-2 என இழந்தாலும் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சதங்களுடன் 692 ரன்கள் குவித்தார். சராசரி 86.50 ஆகும்.

    அதிலிருந்து தற்போது வரை விராட் கோலி நம்பமுடியாத வகையில் விளையாடி வருகிறார். ஏராளமான சாதனைகளை உடைத்தெறிந்துள்ளார். தற்போதும் விராட் கோலி சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் விராட் கோலியை எங்களுடைய மும்மூர்த்திகள் கட்டுப்படுத்துவார்கள் என்று ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் ஆன டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறுகையில் ‘‘எங்களுடைய பந்து வீச்சாளர்கள் விராட் கோலியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரை சந்தித்த வரையில், அவர்கள் எவ்வளவு கடின பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். விராட் கோலிக்கு போதுமான அளவு நெருக்கடி கொடுக்க இவர்களால முடியும். எல்லோருமே இந்த உலகத்தில் மனிதர்கள்தானே.

    விராட் கோலி சிறந்த வீரர் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை முதன்முதலாக பெங்களூருவில் பார்த்தேன். மிகவும் சிறப்பான வீரர். ஆனால், அவர் வீழ்த்தும் அளவிற்கான பந்து வீச்சாளர்களை நாங்கள் பெற்றுள்ளோம். மூன்று பேரும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சு குழு. மிகவும் சிறப்பான போட்டியாக இருக்கப்போகிறது. நாங்கள் இந்தியாவை வீழ்த்தி போட்டியில் முன்னணி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிராக சதம் விளாசியதால் முரளி விஜய் அடிலெய்டு டெஸ்டில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. #AUSvIND
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் முரளி விஜய். தென்ஆப்பிரிக்கா தொடரிலும், இங்கிலாந்து தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை.

    அதேவேளையில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடினார். கவுன்ட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிவில் விளையாடும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

    அடிலெய்டில் முதல் டெஸ்ட் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மோதிய, இந்த ஆட்டம் நவம்பர் 28-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி (நேற்று) வரை நடைபெற்றது.

    ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறங்கிய பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல் ஆகியோரைத்தான் இந்திய அணி நிர்வாகம் தொடக்க வீரர்களாக களம் இறக்க முடிவு செய்தது. இதனால் முதல் இன்னிங்சில் முரளி விஜய்க்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரித்வி ஷா 69 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். லோகேஷ் ராகுல் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    இந்தியா பீல்டிங் செய்யும்போது பிரித்வி ஷாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் லோகேஷ் ராகுல் உடன் முரளி விஜய் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். லோகேஷ் ராகுல் 62 ரன்கள் சேர்த்தார். முரளி விஜய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 132 பந்தில் 129 ரன்கள் குவித்தார்.

    காயம் அடைந்த பிரித்வி ஷா முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முரளி விஜயா? அல்லது ரோகித் சர்மாவா? என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் 2-வது இன்னிங்ஸ் சதத்தால் முரளி விஜய்  தொடக்க பேட்ஸ்மேனாக விளையாட அதிக வாய்ப்புள்ளது.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு டெஸ்டிலும் இந்த இருவர்களையும்தான் தொடக்க வீரர்களாக களம் இறக்க வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த முறை ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை எனில், இதற்குப்பிறகு வாய்ப்பே கிடைக்காது என்று கூறப்படுகிறது.

    இந்திய அணியில் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா மற்றும் முரளி விஜய் ஆகிய தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் இருவருக்குத்தான் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். இந்நிலையில் லோகேஷ் ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரைத்தான் தொடர் முழுவதும் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறக்க வேண்டும்என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான் கேப்டனாக இருந்தால் கேஎல் ராகுல் மற்றும பிரித்வி ஷா ஆகியோருக்கு தொடர் முழுவதும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்பு கொடுப்பேன். ஏனென்றால், முரளி விஜய் போதுமான அளவு வாய்ப்பு பெற்றுவிட்டார். தற்போது அவர் மீண்டும் வாய்ப்பு பெற காத்திருக்க வேண்டும்.



    பிரித்வி ஷா அவரது திறமையை நிரூபித்திருக்கிறார். அறிமுக டெஸ்டில் சதமும், அடுத்த போட்டியில் 60 ரன்களுக்கு மேலும் அடித்துள்ளார். அதனால் அவருக்கு எதிர்காலம் இருக்கிறது. அவரால் அடுத்த 10 முதல் 12 வருடங்கள் வரை விளையாட முடியும். அதனால் அவருக்கு தொடர் முழுவதும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆஸ்திரேலியா தொடரில் முரளி விஜய் களம் இறங்குவார் என்று நான் பார்க்கவில்லை’’ என்றார்.
    இந்தியாவிற்கு எதிரான அடிலெய்டு முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியில் இந்த 11 பேர்தான் இடம்பெற வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் விருப்பம் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பா்ரக்கப்படுகிறது. இதற்கிடையில் ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடிக்கும் வீரர் யார் யார் என்பதை அறிவதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    இந்நிலையில் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா லெவன் அணியில் இவர்கள்தான் இடம்பிடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அடிலெய்டு டெஸ்டிற்கான ரிக்கி பாண்டியின் ஆஸ்திரேலியா ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச், 2. மார்கஸ் ஹாரிஸ், 3. உஸ்மான் கவாஜா, 4. ஷான் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. டிம் பெய்ன், 7. மிட்செல் ஸ்டார்க், 8. பேட் கம்மின்ஸ், 9. நாதன் லயன், 10. ஹசில்வுட், 11. கிறிஸ் ட்ரெமெயின் அல்லது பீட்டர் சிடில்.
    சிட்னி மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு இளம் வீரரான பிரித்வி ஷா சளைக்காமல் செல்பிக்கு போஸ் கொடுத்தார். #AUSvIND #Prithvishaw
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்திய அணி தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் நான் நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டம் நேற்று தொடங்கியது. இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரரான பிரித்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவர், முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்து அசத்தினார். இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவருக்கு, ஆஸ்திரேலியாவில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    சிட்னியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவருடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுக்க விரும்பினார். அவரும் சளைக்காமல் ரசிகர்களுக்கு போஸ் கொடுத்தார். பயிற்சி போட்டியின் நேற்றைய ஆட்டம் மழையா் தடைபட்டது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பிரித்வி ஷா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
    ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதில்தான் முழுக்கவனம் இருக்கும் என இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

    டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கபடுகிறது.

    நாங்களும் இதில்தான் முழுக்கவனம் செலுத்துவோம் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஷாந்த் சர்மா கூறுகையில் ‘‘தற்போது இருக்கும் முக்கிய சிந்தனை தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். ஒவ்வொருவரின் கவனமும் அதில்தான் உள்ளது.



    நாங்கள் தனிப்பட்ட வீரர்களின் சிறந்த ஆட்டம் குறித்து யோசிக்கவில்லை. ஒரே இலக்கு தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். பயிற்சி ஆட்டம் தொடருக்கு சிறப்பான பயிற்சியாக இருக்கும். நீண்ட காலமாக இங்கு விளையாடும்போது சூழ்நிலை பற்றி நன்றாக தெரிந்திருக்கும்.

    சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. இதில் இன்னும் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும்.



    எந்தவொரு வீரரும் நாட்டிற்காக விளையாட அணியில் தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் சிறந்த வீரர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் ஏன் நாட்டின் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். எதையுமே நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.
    சிட்னியில் இன்று தொடங்க இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் இந்திய வீரர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு இந்திய அணி கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

    இந்த பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிட்னியில் கனமழை பெய்ததால் டாஸ் கூட சுண்டப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் தங்களது திறமையை பரிசோதிக்க இந்த போட்டி சிறப்பாக இருக்கும் என்று எண்ணிய நேரத்தில், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
    ×